WELCOME TO PDK FOUNDATION
SMALL STORY FOR SPECIAL CHILDREN

நமக்கெல்லாம் சாப்பாடு ஊட்டி விட அப்பா அம்மா இருக்காங்க ஆனா அந்த பசங்களுக்கு யாருமே இல்லை
அந்தப் பசங்க தன்னைப் பற்றியே அறியாமல் இருப்பார்கள்,அந்த பசங்களுக்கு உள்ள இருக்க பொதுவான விஷயம் என்னன்னு பார்த்தீங்கன்னா அவங்க சாப்பிடும் பொழுது prayer பண்ணிட்டு தான் சாப்பிடுவார்கள்.
ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுறேன் .நம்ம எல்லாம் வீட்ல யாராச்சும் சண்டை போட்ட இரண்டு நாள் ஒரு நாள் பேசாமல் இருப்போம் ஆனா அந்த பசங்க அப்படி கிடையாது சண்டை போட்டா உடனே அதை மறந்து பசங்களோட சிரிச்சு பேசுவாங்க .
எனக்கு அப்பா கிடையாது அந்த பாசத்துக்கு நான் ஏங்குவேன்
நான் வெளியே எங்க தெருவில் பார்க்கும் போது அப்பா பசங்க ரெண்டு பேரும் ஜாலியா விளையாடுவாங்க அப்போது எனக்கு அந்த அன்புத் திரும்ப கிடைக்காதா என்று நான் ஏங்காத நாட்களே கிடையாது.
அந்த மாதிரி தான் அந்த பசங்களுக்கு அப்பா அம்மா இல்லை என்று ஏக்கம் நிறையவே இருக்கும்.ஆனா இந்த மாதிரி ஸ்கூல்லதான் 3 மாசத்துல இருந்து 60 வயசு வரைக்கும் இருக்காங்க.நான் ஒரு நாள் எங்க சார் கூட அந்த ஸ்கூலுக்குப் போனேன் அப்போது அந்த பசங்களை பார்க்கும்போது எனக்கு கண்லருந்து தண்ணிதான் வந்து .அப்போ முடிவு பண்ண அந்த பசங்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு.செய்வேன் அந்த பசங்களுக்கு என் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் என்னால முடிஞ்ச உதவி நான் செஞ்சுக்கிட்டே தான் இருப்பேன்.
நம்ம ஐயாயிரம் பத்தாயிரம் கொடுத்து நிறைய உணவு சாப்பிட்டு இருப்போம்,அதெல்லாம் நமக்கு சந்தோஷம் கிடையாது,நம்ம அந்த பசங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு போட்டால் எப்போதும் அதோடு சந்தோஷம் உங்களுக்கு வேற எங்கேயும் கிடையாது .நைட்டு நிம்மதியா தூக்கம் வரும்.வாழ்க்கையில எல்லாருக்கும் டைம் கிடைச்சா அந்த ஸ்கூலுக்கு மறக்காமல் போய் பாருங்க அந்த பசங்க கிட்ட பேசுங்க அப்பத்தான் தெரியும் அந்த பசங்க அன்புக்கு இவ்ளோ காத்திருக்காங்க
தெரியும்.
நீங்கள் உதவி செய்யும் வரை என் கரங்கள் கையேந்தி கொண்டே இருக்கும்.
எனக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் இனிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
